தமிழ் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படங்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. புதியதாக வரும் இயக்குனர்கள் கூட தங்கள் படங்களை சிறப்பாக காட்சிப்படுத்தி உயர்ச்சி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை பெற்ற படங்களை குறித்து பார்ப்போம்.
1. லியோ :
தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றால் அது நடிகர் விஜய்யின் லியோ படம் தான். லோகேஷ் – விஜய் இரண்டவாது முறையாக கூட்டணி அமைத்த இந்தப் படம் சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது.
இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாக களமிறங்க, அனிருத் இசையமைக்க, கிளாசிக் ஜோடியான த்ரிஷா நடிக்க LCU கனெக்ட் என்ற முடிச்சு போட பெரிதும் ஹைப் ஏற்றப்பட்ட இத்திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டது.
தயாரிப்பாளர் தரப்பின் அறிவிப்பின் படி, 12 நாட்களில் மொத்தமாக 540 கோடி ரூபாயை வசூல் செய்தது லியோ. தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக உலக அளவில் இத்திரைப்படம் சுமார் 620.5 கோடி ரூபாயை வசூல் செய்ததாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். அதிகப்படியான வசூலால், நடப்பு ஆண்டிலேயே அதிக வசூல் எடுத்த திரைப்படமாக மாறியது லியோ.
2. ஜெயிலர் :
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி முத்துவேல் பாண்டியனாகவும், ஜெயிலராகவும் களமிறங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்திய படமாக அமைந்தது ஜெயிலர்.
இத்திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றத்தில் இருந்த ரஜினி ரசிகக்ரளை குஷியாக்கிய படம் என்றே சொல்லலாம். ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா என்று திரைப்பட்டாளமே களமிறங்கிய படத்தை இசையால் தூக்கி நிறுத்தினார் அனிருத். கூடவே வில்லனாக இருந்தார் விநாயகம்.
இந்த படம் வெளியாகி 16 நாட்கள் முடிவில் மொத்தமாக 525 கோடியை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. மொத்தமாக 607 கோடி ரூபாயை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதன்படி ஜெயிலர் படம் இரண்டாம் இடத்தில உள்ளது.
3. பொன்னியின் செல்வன் 2 :
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் படம் சுமார் 500 கோடி ரூபாயை வசூல் செய்தது. முதல் பாகத்தைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியான படம் கொஞ்சம் ஏமாற்றத்தையே கொடுத்தது. லாபத்தில் நஷ்டம் என்பதுபோல, படத்தின் நேர்மறை விமர்சனங்களில் சற்று சறுக்கல் இருந்தது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனமும் வந்தது. ஆனாலும், இந்த விமர்சங்கள் வசூலை பாதிக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக படம் 300 கோடியை வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வெற்றிகரமான ஓடியதால் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி ரூபாயை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. அதன்படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
4. வாரிசு :
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சங்களையே பெற்றது.
50 நாட்கள் திரையரங்கிய ஓடிய இந்த படம் 310 கோடி ரூபாய் வசூலை குவித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி இந்த திரைப்படம் நான்காவது இடத்தில உள்ளது.
5. துணிவு :
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த படமும் இந்த ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வந்தது. 9 வருடங்களுக்கு பிறகு தல தளபதி படங்கள் ஒன்றாக திரைக்கு வந்தது. ஆகையால் இரு ரசிகர்கள் இடைய போட்டியாக அமைந்தது.
இந்த படமும் கலவையான விமர்சங்களையே பெற்றது. , இந்த படம் ஒட்டுமொத்தமாக 220 கோடி வசூல் செய்தது. அந்தவகையில், இப்படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.