வங்கதேசத்தில் முகமது யூனுஸ் அரசின் முன்னுக்கு பின் முரணான வர்த்தக கொள்ளைகளால், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் நம்பகத்தன்மையை அந்நாடு இழந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பு.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ்அமைத்துள்ள இடைக்கால அரசு மீது உலக நாடுகளுக்கு எப்போதும் ஒரு சந்கேப்பார்வை இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு, அவரது அரசு கடைப்பிடிக்கும் முன்னுக்கு பின் முரணான வர்த்தக கொள்கைகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதாகக் கூறிவிட்டு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதை பொருளாதார நிபுணர்கள் இதற்கு உதாரணமாகக் கூறுகின்றனர்.
இப்படி சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பதாலேயே, முகமது யூனுஸ் மீதான சந்தேகப் பார்வை உலக நாடுகள் மத்தியில் வலுத்திருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தனை நாட்கள் இந்தியாவுடன் நீடித்த வந்த வர்த்தக உறவும் கேள்விக்குறியாகி இருப்பதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாகச் சாலை மார்க்கமாக நடைபெற்று வந்த வர்த்தகம் தடைபட்டிருப்பதால், இந்தியாவிடம் வாங்கி வந்த அரசியை, அதிக விலை கொடுத்துச் சிங்கப்பூரிடம் வாங்கும் கட்டாயத்திற்கு வங்கதேசம் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவுடன் திடீரெனப் போடப்பட்ட ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி, ஜப்பானும் நிபந்தனை விதிப்பதால், அந்நாட்டுனான வர்த்தகத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை போன்றே, தங்கள் நாட்டு வாகனங்களுக்கும் வரி குறைக்கப்பட வேண்டும் என ஜப்பான் நிர்பந்திப்பதாகத் தெரிகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்படவிருந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆசிய நாடுகளுடன் தான் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நினைக்கக் கூடாது. வங்கதேச வர்த்தகத்தின் மிகப்பெரும் பலமாகக் கருதப்படும், ஐரோப்பிய நாடுகளுடனும் இதே நிலையே நீடிக்கிறது. அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, போயிங் விமானங்களை இறக்குமதி செய்ய வங்கசேதம் சம்மதித்திருக்கிறது. இதனை சாக்காகப் பிடித்துக்கொண்ட பிரான்ஸ், தங்கள் நாட்டின் ஏர் பஸ் விமானங்களை வாங்க வேண்டும் என அடம்பிடிக்க தொடங்கியிருக்கிறது.
இப்படி எல்லா திசைகளிலும் முகமது யூனுஸ்அரசுக்கு தோல்வியே காத்திருக்க, மிகப்பெரிய அடியாக, இத்தனை நாட்கள் பெற்று வந்த பொருளாதார சலுகைகளையும் அந்நாடு இழக்க தொடங்கியிருக்கிறது.
குறைந்த வளர்ச்சி காணும் நாடுகளின் பட்டியலில் இருந்து அந்நாடு வெளியேற்றப்பட்டதால், உலக நாடுகளின் உதவி கிடைக்காமல் அந்நாடு திணறி வருகிறது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்து இடைக்கால அரசு அமைத்திருக்கும் முகமது யூனுஸ் நிர்வாக ரீதியாகத் திறனற்று இருப்பதையே இந்தச் சூழல்கள் வெளிப்படுத்துவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
















