திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து ஆறாம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பகல் பத்து, ராப்பத்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பகல் பத்து ஆறாம் நாளான இன்று, உற்சவர் நம்பெருமாள் திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ஜீன மண்டபத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















