குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவத்தலமாக கருதப்படும் குற்றாலநாதர் கோயிலில் ஆண்டுதோறம் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான திருவாதிரை திருவிழா ஜனவரி 3ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கொடி மரத்துக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கொடி மரத்தில் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















