பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடி பேரணி நடத்திய திரையுலக போராளிகள் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின்போது தலைமறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறோம் எனும் பெயரில் தொடர்ந்து இந்து விரோத மனப்பான்மையை கடைபிடித்துவருவதன் பின்னணியில் சதி இருக்கிறதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பெரும் போரட்டங்களின் விளைவாக அவரின் ஆட்சி கவிழ்ந்தது. நாளுக்கு நாள் வன்முறை பெருகியதால் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களின் முகமாகச் செயல்பட்ட இன்குலாப் மாஞ்சா எனும் அமைப்பைச் சேர்ந்த ஷெரிப் உஸ்மான் ஹாதி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்குத் தயாராகி வந்தார். டாக்காவின் பிஜோய் நகர் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஷெரிப், அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக அந்நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர்கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதோடு, அவர் உடல் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. தீபு சந்திர தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் வங்கதேசம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு அமைதி காப்பது கோழைத்தனமானதுஎனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்து லட்சக்கணக்கான மக்களைஒட்டுமொத்தமாகத் தண்டிப்பதும் மனித குலங்களுக்கு எதிரானது என ராகுல்காந்தியும் பொங்கி எழுந்தனர். அரசியல்வாதிகள் அரசியல் செய்வார்கள் என்பதைதாண்டிப் பாலஸ்தீன விவகாரத்தில் திரையுலக பிரபலங்களும் திரண்டு பாலஸ்தீன விவகாரத்தில் மத்திய அரசின் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் செயல்பட்டனர்.
அதிலும் தமிழகத்தில் திரை பிரபலம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, தேவைக்குஏற்பத் திடீர் போராளிகளாக உருவெடுக்கும் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சத்தியராஜ் ஆகியோர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் பேரணியும் நடத்தினர். பாலஸ்தீன மக்களுக்குஆதரவாகக் குரல் கொடுத்த திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்துக்களுக்கு எதிரானதாக்குதலைத் தெரிந்தும் தெரியாதது போலக் கடந்து செல்வது கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் வன்முறையை பயன்படுத்தி இந்துக்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான செய்திகள் நாள்தோறும் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த செய்திகளை பார்த்த பின்பும், எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் கடந்து செல்வதன் மூலம் திரையுலக போலி போராளிகளுக்கு ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடி பேரணியை நடத்தியவர்களுக்கு, வங்க தேசத்தில் இந்துக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலுக்குக் கண்டனமோ, அல்லது கொல்லப்பட்டஇளைஞருக்குக் குறைந்தபட்சமாகக இரங்கல் தெரிவிக்கவோ கூட மனம் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறோம் எனும் பெயரில் அண்டை நாட்டு மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதும், இந்து மக்களின் மீதும் நடைபெறும் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல தலைமறைவாகி விடுவதையும், வாடிக்கையாக கொண்டிருக்கும் திரையுலகப் போலிப் போராளிகள் ஒருவர் பின் ஒருவராக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக் கொண்டிருருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
















