இந்தியாவின் ஒரு பகுதிதான் அருணாச்சல பிரதேசம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், அருணாச்சல பிரதேச பெண் துன்புறுத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
போக்குவரத்து விதிமுறைகளை நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை எனறும் அவர் கூறினார்.
நமது கலாசாரங்களையும், வரலாற்றையும் வெளிப்படுத்துவது இந்தியர்களின் கடமை என்றும், பண்டைய நாகரிகங்களில் இருந்து நவீன காலத்திற்கு ஏற்றவாறு இந்தியா முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.
வங்கதேசத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வாழ்த்துகிறோம் என்றும் ஜெங்சங்கர் குறிப்பிட்டார்.
















