இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திரா பிரதாப்பை, கோவா கப்பல் கட்டும் தளத்தில் வைத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இது தொடர்பாக கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், கப்பலில், பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை என்றும், இந்த கப்பல் 114. 5 மீட்டர் நீளம், 4,200டன் எடையும், 6 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை செல்லக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















