முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
ஈரோட்டில் முதியவரைக் கொலை செய்ய முயன்றதாகப் பொதுமக்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட வட மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். ...