இது எப்படி சாத்தியம் வாயடைத்துப் போன விஞ்ஞானிகள் – 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர் பறந்த அமூர் பருந்துகள்.. சிறப்பு தொகுப்பு
அமூர் ஃபால்கன்... 150 முதல் 200 கிராம் எடையுள்ள மிகச் சிறிய அமூர் பருந்துகள்தான் இந்த சாதனைக்கு சொந்தமானவை.... இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று அமூர் பருந்துகளை தேர்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றின் கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறனை, பாணியை கண்காணிக்க, அப்பறவைகளின் உடலில் செயற்கைக்கோள் கருவிகளை பொருத்தினர்... அவற்றின் செயல்பாட்டை கண்டு வியந்தே போனார்கள் விஞ்ஞானிகள்.... இந்தியாவில் இருந்து 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர்களை கடந்து ஆப்பிரிக்காவை அடைந்திருந்தன அந்தப் பறவைகள்... அமூர் பருந்துகள் மிருகத்தனமாக சக்தியை மட்டும் பயன்படுத்தாமல், வளிமண்டல இயற்பியலை நேர்த்தியாக பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் வாயடைத்து போயினர்... 150 முதல் 200 கிராம் எடையுள்ள இந்தப் பறவைகள், இந்திய நிலப்பரப்பைக் கடந்து, அரபிக் கடலைக் கடந்து, ஆப்பிரிக்காவின் குளிர்கால நிலங்களில் கால் பதித்துள்ளன... செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து புறப்படும் அமுர் பருந்துகள் ஒரு வாரத்திற்குள் ஐந்தாயிரம் முதல் 6000 கிலோ மீட்டர்களை கடந்து கிழக்கு ஆப்பிரிக்காவை ...
