இது எப்படி சாத்தியம் வாயடைத்துப் போன விஞ்ஞானிகள் - 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர் பறந்த அமூர் பருந்துகள்.. சிறப்பு தொகுப்பு
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது எப்படி சாத்தியம் வாயடைத்துப் போன விஞ்ஞானிகள் – 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர் பறந்த அமூர் பருந்துகள்.. சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Jan 6, 2026, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமூர் ஃபால்கன்… 150 முதல் 200 கிராம் எடையுள்ள மிகச் சிறிய அமூர் பருந்துகள்தான் இந்த சாதனைக்கு சொந்தமானவை….

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று அமூர் பருந்துகளை தேர்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றின் கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறனை, பாணியை கண்காணிக்க, அப்பறவைகளின் உடலில் செயற்கைக்கோள் கருவிகளை பொருத்தினர்…

அவற்றின் செயல்பாட்டை கண்டு வியந்தே போனார்கள் விஞ்ஞானிகள்…. இந்தியாவில் இருந்து 5 நாட்களில் 5000 கிலோ மீட்டர்களை கடந்து ஆப்பிரிக்காவை அடைந்திருந்தன அந்தப் பறவைகள்… அமூர் பருந்துகள் மிருகத்தனமாக சக்தியை மட்டும் பயன்படுத்தாமல், வளிமண்டல இயற்பியலை நேர்த்தியாக பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் வாயடைத்து போயினர்…

150 முதல் 200 கிராம் எடையுள்ள இந்தப் பறவைகள், இந்திய நிலப்பரப்பைக் கடந்து, அரபிக் கடலைக் கடந்து, ஆப்பிரிக்காவின் குளிர்கால நிலங்களில் கால் பதித்துள்ளன…

செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து புறப்படும் அமுர் பருந்துகள் ஒரு வாரத்திற்குள் ஐந்தாயிரம் முதல் 6000 கிலோ மீட்டர்களை கடந்து கிழக்கு ஆப்பிரிக்காவை அடைவது வழக்கமாக வைத்திருக்கின்றன… பெரும்பாலும் அரேபிய கடல் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் நீண்ட இடைவிடாத கடல் பயணங்களை மேற்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கும் அமூர் பருந்துகள், குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் துவக்கத்திலும் மீண்டும் வடக்கு நோக்கி நகர்ந்து, சீனா, ரஷ்யா உட்பட வடகிழக்கு ஆசியாவில் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் அடைவது தெரியவந்துள்ளது.

மேலும் பருவமழை காற்றும், அரேபியக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் காணப்படும் வலுவான காற்று அமைப்பும் அமூர் பருந்துகளின் பயணத்தை எளிதாக்கும் இயற்பியலின் தன்மையை எடுத்துரைக்கின்றன… இது பறவைகளின் ஆற்றல் செலவிடப்படுவதை குறைத்து, நிலையான உந்துசக்தியாக விளங்குகின்றன…

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, X தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்ததன் மூலம் ஃபால்கனின் அசாத்திய திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது… இது குறித்த ஆய்வுகள் தொடரும் நிலையில், ஒவ்வொரு முடிவும் விஞ்ஞானிகளின் புலப்படாத கேள்விகளுக்கும் விடையளிக்கலாம் என்றே கூறலாம்…

Tags: @forestAmur FalconsAmur Falcons travelAmurwild birds
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேசத்தில் ஒரே நாளில் 2 இந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து – 3 கிராம மக்கள் வெளியேற்றம் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies