வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார் பிரதமர் மோடி – ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார் !
வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, தேசிய 'பிஎம் விஸ்வகர்மா' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20 அன்று மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் தேசிய 'பிஎம் விஸ்வகர்மா' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை அவர் வழ்ங்குகிறார். ...