வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார் பிரதமர் மோடி - ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார் !
Oct 18, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார் பிரதமர் மோடி – ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார் !

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, தேசிய ‘பிஎம் விஸ்வகர்மா’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20 அன்று மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் தேசிய ‘பிஎம் விஸ்வகர்மா’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை அவர் வழ்ங்குகிறார்.  இந்தத் திட்டத்தின் கீழ் கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் உறுதியான ஆதரவை அடையாளப்படுத்தும் வகையில், 18 வர்த்தகங்களின் கீழ் 18 பயனாளிகளுக்கு பிரதமர், விஸ்வகர்மா கடன்களை வழங்குவார்.

மகாராஷ்டிராவின் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைப் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.  1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பூங்காவை மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்ஐடிசி) மாநில அமலாக்க நிறுவனமாக உருவாக்கி வருகிறது.

ஜவுளித் தொழிலுக்காக 7 பிரதமரின் மித்ரா பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் பிரதமர் மித்ரா பூங்காக்கள் ஒரு முக்கிய படியாகும். இது உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்க உதவும், இது வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) உட்பட பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்கும். மேலும் இத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும்.

மகாராஷ்டிர அரசின் “ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாட்டு மையம்” திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார்.

15 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்கள் தன்னம்பிக்கை பெறவும், பல்வேறு வேலை வாய்ப்புகளை அணுகவும் மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் சுமார் 1,50,000 இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

Tags: PM ModiMaharastramodi maharastra visitPM Vishwakarma
Share
Tweet
SendShare
Previous Post

மானாமதுரை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை – 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies