தேனியில் துப்புரவு தொழிலாளர்களை ஜாதி பெயரை கூறி இழிவாக பேசிய திமுக பேரூராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் மீது SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியின் நகர் மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் நிபந்தன்.
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன்னிடம் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது தொடர்பாக மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை இழிவாக பேசியதுடன் ஜாதிப் பெயரை கூறி திட்டியுள்ளார்.
இதுகுறித்து தூய்மை பணியாளர் அறிவழகன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் நிபந்தன் மீது SC ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.