செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் அதிக லாபம் - டாக்டர் ஜிதேந்திரசிங்
Nov 3, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் அதிக லாபம் – டாக்டர் ஜிதேந்திரசிங்

Web Desk by Web Desk
Jul 12, 2023, 12:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

389 செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 157 மில்லியன் அமெரிக்க டாலர் கடந்த 9 ஆண்டு காலத்தில் ஈட்டப்பட்டது என விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்

 

சந்திரன் குறித்த புதிய பார்வையை சந்திராயான் -3 உலகிற்கு வழங்கும் எனவும், 389 செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 157 மில்லியன் அமெரிக்க டாலர் கடந்த 9 ஆண்டு காலத்தில் ஈட்டப்பட்டது  என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியவர்,

சந்திரயான் -1 திட்டம் மூலம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை உலகிற்கு வெளி கொண்டு வந்து பல்வேறு புதிய ஆய்வுகளுக்கு  அடித்தளமிட்டது  எனறு தெரிவித்தார்.  மேலும், தற்போது ஒட்டுமொத்த உலகமும் சந்திரன் -3 ஐ மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும்   மற்றும் நம்பிக்கையோடும்  பார்க்கும் அதே வேளையில், புதிய அம்சங்கள் & நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை சந்திரன் -3 வெளிக்கொண்டு வர உள்ளது என்று கூறியுள்ளார்.

சந்திரயான் -3 விண்கலத்தின் சமிக்ஞைகள் நிலவில் ஒரு படி மேலும் நெருங்கும் என்றும், மேலும் நிலவைப் பற்றி ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கவில்லை என்பதை நிரூபித்து காட்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திரயான் -3 இல் உள்ள தனித்துவமான அம்சங்கள் நிலவில் இருந்து நிலவை மட்டும் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், நிலவிலிருந்து பூமியையும் கண்காணித்து விண்வெளி துறையில் சாதித்துள்ள பெருமைமிக்க பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தனக்கு நிகரான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தரும் நாடு என்பதை அமெரிக்கா தெளிவாக்கி உள்ளது என்று தெரிவித்தார்.  மேலும் நாசா இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை பெறுவது மற்றும் ஆர்டிமிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா ஒரு பங்குதாரராக இருப்பது ஆகியவை இந்தியாவின் தலைசிறந்த விண்வெளி ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்தார்.

இந்திய விண்வெளி தொழில்நுட்பம் ராக்கெட் ஏவுதலோடு மட்டுமில்லாமல், பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தையும் அளித்து வருகிறது என்றார். இந்தியா கடந்த ஆறு தசாப்தங்களாக விண்வெளி திட்டங்களில் தனது வளமிக்க விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது.  இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையில், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, விவசாயம், கல்வி, மருத்துவம், ஊரக வளர்ச்சி, பேரிடர் எச்சரிக்கை மற்றும் தணிப்பு, காலநிலை மாற்றம், திசையறிதல், பாதுகாப்பு மற்றும் ஆளுகை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மேம்படும்  விண்வெளி மற்றும் விண்வெளி பொருளாதாரம் ஆகியவை  எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கிய தூணாக இருக்கும் என்று தெரிவித்தார்.  424 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இந்தியா மூலம் ஏவப்பட்டுள்ளன. இவற்றில் 389 செயற்கைக்கோள்கள் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்றார். மேலும், செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 174 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது என்றும், இதில் 157 மில்லியன் அமெரிக்க டாலர் கடந்த 9 ஆண்டு காலத்தில் ஈட்டப்பட்டவை என்றும் தெரிவித்தார்.

Tags:
ShareTweetSendShare
Next Post

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா” தமிழ் திரைப்படம்!!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies