வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Jan 25, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Web Desk by Web Desk
Jul 12, 2023, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி உள்ளது. தற்போது மீட்புப் பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்குச்  சுற்றுலா சென்ற தமிழகத்தைச்   12 கல்லூரி மாணவர்கள் அங்கு பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக சொந்த ஊருக்குத்  திரும்ப முடியவில்லை என்ற தகவல் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து மாநில அவசரகால செயல்பாட்டு  மையத்தில் 10.07.2023 அன்று கிடைக்கப்பெற்றது.

இமாச்சல பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறை,  இயக்குநர், குலு மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்புகொள்ளப்பட்டு மாணவர்களின் நிலைமை குறித்து கேட்டறியப்பட்டது.

இமாச்சல பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறையினர், மிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது என்றும், சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்றும், தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் நிலைமை சரியானவுடன் உடனடியாக தங்கள் ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே இமாச்சலபிரதேச தலைமை காவல்துறை இயக்குநர் மூலமாக அனைத்து சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

11.07.2023 அன்று மாலை 6 மணியளவில் போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளதாகவும், குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் இருந்து 4500 வாகனங்கள் சண்டிகருக்கு புறப்பட்டதாகவும் நிலைமை சீரடைந்து உள்ளதாக செய்தி கிடைக்கப்பெற்றது.

மேற்கண்ட 12 கல்லூரி மாணவர்களும் நலமுடன் சண்டிகருக்கு வந்துள்ளதாகவும் அவர்களின் பெற்றோர் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.

அமர்நாத் பனிலிங்கம் தரிசிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்டதால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதற்கான பயணம் தடைபட்டுள்ளதாக அறியப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி தேசிய பேரிடர் மீட்பு படையின் காவல்துறை துணைத் தலைவர் அவர்களை தொடர்புகொண்டு விசாரிக்கப்பட்டது.  கடந்த இரு தினங்களாக ஜம்முவிலிருந்து பஹல்காம் மற்றும் பல்டால் மார்க்கமாக அமர்நாத்திற்கு செல்லும் வழிப்பாதை மூடப்பட்டு இருந்ததாகவும் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வடமாநிலத்தில் நிகழ்ந்து வரும் பேரிடரில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இதுவரை 12 தொலைப்பேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.      வடமாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களுடன் தொடர்புகொண்டு பயணத் தடையிலுள்ள தமிழர்களுக்கு உதவும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ShareTweetSendShare
Previous Post

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா” தமிழ் திரைப்படம்!!

Next Post

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை – மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Related News

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல் – மாணிக்கம் தாக்கூர் தகவல்!

பட்ஜெட் கூட்டத்தொடர் : வரும் 27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு!

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது – சீமான்

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது – அன்புமணி குற்றச்சாட்டு!

இந்திய நாகரிகம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது – மோகன் பகவத்

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையா? – டிடிவி தினகரன் கேள்வி!

காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

பெரம்பலூர் அருகே ரவுடியை கொலை செய்ய முயற்சி – காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!

இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா – என்டிஏ கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார்!

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies