ஊழல் மற்றும் வாரிசு அரசியல் சாமானிய மக்களின் நலனுக்கு அநீதி இழைத்துள்ளது- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
Jul 7, 2025, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் சாமானிய மக்களின் நலனுக்கு அநீதி இழைத்துள்ளது- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

சில கட்சிகள் சாமானிய மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி  குற்றம் சாட்டினார்.

Web Desk by Web Desk
Jul 18, 2023, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில்
ரூ710 கோடி மதிப்பில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றினார். அப்போது பேசியவர்.,

வீர் சாவர்கர் சர்வதேவ விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருப்பதால் ஒட்டுமொத்த தேசமும் இந்த யூனியன் பிரதேசத்தை ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டு மக்களின் உற்சாகமான சூழலையும் மகிழ்ச்சியான முகங்களையும் காண்கின்றேன்.
ஒரே  நேரத்தில் 10 விமானங்ளை நிறுத்த முடியும் என்ற  நிலையில்  கூடுதலான விமானப் போக்குவரத்து ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால்  இந்தப் பகுதியில் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கடந்த 9 ஆண்டுகளில்,  தற்போதுள்ள அரசு, காங்கிரஸ் அரசுகளின் தவறுகளை உணர்வுபூர்வமாக சரிசெய்து வருவது மட்டுமின்றி புதிய நடைமுறையையும் வகுத்துள்ளது.   “இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதிய மாதிரி உருவாகியுள்ளது. ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்று தெரிவித்தார்.
அனைத்து பிராந்தியங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வளர்ச்சியையும், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

முந்தைய காங்கிரஸ் அரசின் 9 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் ரூ.23,000 கோடி நிதியைப் பெற்ற நிலையில், பாஜக அரசின் 9 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  முந்தைய காங்கிரஸ் அரசின் 9 ஆண்டுகளில் 28,000 வீடுகள், குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50,000 ஆகியுள்ளது என்று அவர் கூறினார். தற்போது அந்தமான் நிக்கோபாரில் உள்ள அனைவரும் வங்கிக்கணக்கை வைத்திருப்பதோடு, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற வசதியையும் பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த யூனியன் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத நிலையில், போர்ட்பிளேரில் மருத்துவக் கல்லூரி அமைந்ததற்கு தற்போதைய அரசே பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே இணையதள வசதிக்கு செயற்கைக் கோள்களையே நம்பியிருக்க வேண்டிய நிலையிருந்தது. தற்போதுள்ள அரசு பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் முன்முயற்சியை மேற்கொண்டது.

இவ்வாறு விரிவுப் படுத்தப்பட்ட வசதிகள்  சுற்றுலாவிற்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் கூறினார். செல்பேசி இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, விமானநிலைய வசதிகள், சாலைகள் முதலியவை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருவதை ஊக்குவிக்கின்றன.

இதனால்தான், 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. சாகச சுற்றுலாவுக்கும் வரவேற்பு கிடைத்து வருவதோடு, வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.

“வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இணைந்த சீரான முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தின் வாழும் உதாரணமாக அந்தமான் விளங்குகிறது”. செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பே அந்தமானில் ஏற்றப்பட்டாலும், தீவுப் பகுதியில் அடிமைப் போக்கின் சின்னங்களே காணப்பட்டதாக பிரதமர் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிய அதே இடத்தில், கொடியேற்றும் வாய்ப்பு தமக்கும் கிடைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ராஸ் தீவை நேதாஜி சுபாஷ் தீவு என்றும், ஹாவ்லாக் தீவை ஸ்வராஜ் தீவு என்றும் நீல் தீவை ஷாகித் தீவு என்றும் தற்போதைய அரசு பெயர் மாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் பெயர்களை சூட்டியது பற்றியும் அவர் பேசினார். “அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வளர்ச்சி, நாட்டு இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் ஆதார சக்தியாக மாறி உள்ளது”, என்றார்.

இந்தியர்களின் திறனின் மீது தமக்குள்ள அதீத நம்பிக்கையைக் குறிப்பிட்டு, கடந்த 75 ஆண்டுகாலத்தில் சுதந்திர இந்தியா புதிய உயரத்தை நிச்சயம் எட்டி இருக்கும் ஆனால்,
ஊழல் மற்றும் வாரிசு அரசியல் போன்றவை சாமானிய மக்களின் நலனுக்கு எப்போதுமே அநீதி இழைத்ததாக தெரிவித்த அவர், சில கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலையும் சுட்டிக்காட்டினார். சாதி மற்றும் ஊழல் சார்ந்த அரசியலையும் விமர்சித்த அவர், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தண்டனை பெற்ற  அல்லது  பிணையில் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளும் போக்கையும்  சாடினார்.

அரசியலமைப்பைப்  பிணையக் கைதியாக வைத்திருக்கும் மனநிலையையும் அவர் தாக்கிப் பேசினார். இது போன்ற சக்திகள், சாமானிய மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், குடும்ப சுயநல ஆதாயத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பாதுகாப்பு மற்றும் புத்தொழில்கள் துறையில் இந்திய இளைஞர்களின் திறமைக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என கூறினார்.

 

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் 

Next Post

ஆடி மாதத்தில் சுப நிகழ்வுகள் குறைவு – காய்கறி விலை சரிய வாய்ப்பு

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies