கடந்த சில மாதங்களாக தக்காளி , சின்ன வெங்காயம், பாகற்காய் , அவரைக்காய் போன்ற காய்கறிகளின் விளைச்சல் குறைவாக உள்ளதால் இதன் விலை அதிகமானது . இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளதால் காய்கறிகளின் விலைவாசி குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது..
பொதுவாக ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் இருக்காது என்பதால் காய்கறிகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்கறி சாகுபடி நடக்கிறது. ஆந்திரா ,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
எனவே கத்தரிக்காய் ,வெண்டைக்காய் , பச்சை மிளகாய் , சேனை கிழங்கு உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் விலை விரைவில் குறையும் என வியாபாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.