நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், மணிப்பூர் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மக்களவை, மாநிலங்களவை முடங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் தரப்பில் “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையிலே பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
மணிப்பூர் விவாகரத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகளின் அமளிகாரணமாக இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.