“என் மகன் என் பேரன்” இதுதான் தி.மு.க- தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Mar 15, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“என் மகன் என் பேரன்” இதுதான் தி.மு.க- தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. யாத்திரை நடத்தினால் “என் மகன் என் பேரன்” என்று பெயர் சூட்டி இருப்பார்கள் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார் .
மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு விளக்கிக் கூறும் வகையிலும், தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வகையிலும், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்கிற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.

கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பாத யாத்திரை, 5-வது நாளான இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றது. மானாமதுரையிலும் அண்ணாமலைக்குப் பூரண கும்பம் மரியாதையுடன் பொதுமக்கள் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், மக்களிடையே  பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மத்தியில் பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இந்த “என் மண் என் மக்கள்” பாத யாத்திரை.  தமிழகம் முழுவதும் வந்து மக்களைச் சந்திக்க இருக்கிறேன்.


அரசியல் நிகழ்ச்சிகளில் தற்போது உதயநிதியின் மகன் இன்பநிதியும் பங்கேற்கத் தொடங்கி இருக்கிறார். ஆகவே, இதேபோல ஒரு யாத்திரையை தி.மு.க.வினர் நடத்தினால், “என் மகன் என் பேரன்” என்று பெயர் வைத்திருப்பார்கள். இதை நாம் கடந்த 27 மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். டாஸ்மாக் வருமானத்தை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

டாஸ்மாக்கால் வருமானம் பெறுவது யார்? எல்லோரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான். ஆகவே, டாஸ்மாக் வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, கள்ளுக்கடைகளை திறக்கலாம். இதன் மூலம் ஏழை பனைத் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்கும். அவர்களது வாழ்க்கைத் தரமும் உயரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

 மக்களவையில் டெல்லி நிர்வாக அவசர சட்டம்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல்

Next Post

நாட்டின் வடகிழக்குப் பகுதி முன்னேற்றத்துக்கு 108 திட்டங்கள்- மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies