ஆன்லைன் விளையாட்டுக்கு வரி : அக்டோபர் 1 முதல் அமல்!
Nov 6, 2026, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு வரி : அக்டோபர் 1 முதல் அமல்!

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வரிவிதிக்கப்படும் என்று 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Murugesan M by Murugesan M
Aug 3, 2023, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றிற்கு வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சி.ஜி.எஸ்.டி. சட்டம் 2017-ன் அட்டவணை 3-ல் திருத்தம் உட்பட சி.ஜி.எஸ்.டி. சட்டம் 2017,  ஐ.ஜி.எஸ்.டி. சட்டம் 2017 ஆகியவற்றில் சில திருத்தங்களை பரிந்துரைத்தது. ஐ.ஜி.எஸ்.டி சட்டம் 2017-ல் ஒரு குறிப்பிட்ட விதியை சேர்க்க கவுன்சில் பரிந்துரைத்தது.  இது இந்தியாவுக்கு வெளியே உள்ள நிறுவனத்திற்கும், இந்தியாவில் உள்ள ஒரு நபருக்கும்  ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு  ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கு பரிந்துரை செய்தது. பதிவு செய்தல் மற்றும் வரி செலுத்துதல் விதிகளுக்கு இணங்கத் தவறினால், அத்தகைய வழங்குநரால் ஆன்லைன் விளையாட்டுகள் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் எந்தவொரு கணினிப் பொறியிலும்  அனுப்பப்பட்ட, பெறப்பட்டதை, முடக்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டை மதிப்பிடுவதற்கும் அதற்கேற்ப சூதாட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமைக் கோரல்களை வழங்குவதற்கும் குறிப்பிட்ட விதிகளை சேர்க்க சி.ஜி.எஸ்.டி. விதிகள் 2017 திருத்தப்படலாம் என்று கவுன்சில் பரிந்துரைத்தது. இந்த விவகாரம் தொடர்பான அறிவிப்பில் சில அறிவிப்புகள் / திருத்தங்களை வெளியிடவும் கவுன்சில் பரிந்துரைத்தது. சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான நடைமுறையை விரைவாக முடித்து, 2023 அக்டோபர்1 முதல் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் கவுன்சில் முடிவு செய்தது.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள் பங்குதாரர்களின் தகவல்களுக்காக எளிய மொழியில் முக்கிய முடிவுகளைக் கொண்ட இந்த வெளியீட்டில் வழங்கப்பட்டுள்ளன. உரிய சுற்றறிக்கைகள்/ அறிவிக்கைகள்/ சட்டத் திருத்தங்கள் மூலம் இது நடைமுறைக்கு வரும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக்  கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, மாநிலங்கள் மற்றும்  சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள்,  நிதித்துறை மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, 11.07.2023 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டத்தில் சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம்  மற்றும் ஆன்லைன் விளையாட்டு குறித்த அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) இரண்டாவது அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றில்  நடவடிக்கை எடுக்கக்கூடிய உரிமைக் கோரல்களுக்கு முழு முக மதிப்பில் 28% வரி விதிக்கலாம் என்று இக்குழு பரிந்துரைத்தது.

Tags: gst
Share
Tweet
SendShare
Previous Post

நாடும் நமதே… 40-ம் நமதே… : 6-வது நாள் பாதயாத்திரையில் அண்ணாமலை நம்பிக்கை

Next Post

பா.ஜ.க.வில் பிரபல நடிகை ஜெயசுதா!

Related News

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies