புதுதில்லியில் நேற்று பிரகதி மைதானத்தில் இருந்து ஹர் கர் திரங்கா எனப்படும் இல்லந்தோறும் தேசியக் கொடி தொடர்பான இரு சக்கர வாகனப் பேரணியை குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், நமது மூவர்ணக் கொடி நமது பெருமை. அனைவரும் பெருமைமிக்க இந்தியர்களாக இருக்க வேண்டும், எப்போதும் தேசத்தை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கூறினார். ஒவ்வொரு துறையிலும் இந்தியா அடைந்துள்ள மகத்தான முன்னேறிவரும் நிலையில், 2047 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, உலக அரங்கில் முதலிடத்தில் இருக்கும் வகையில் நமது இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிள்களில் பேரணி சென்றனர். அவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஜி கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர், பியூஷ் கோயல், மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.