இந்திய ஆண்கள் கூடைப்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவை 90-74 என்ற கணக்கில் வென்றது. அதன் மூலம் ஆசிய 2023 FIBA ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு முன் போட்டிக்கு நேரடியாக தேர்வாகி உள்ளது.
சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி 85-74 என்ற கணக்கில் சிரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா இரண்டு போட்டிகளில் நான்கு புள்ளிகள் பெற்று பட்டியலில் பஹ்ரைனுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.
இதை தொடர்ந்து இந்தோனேசியா அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தோனேசியா வீரர்கள் டெரெல் போல்டன் (23 புள்ளிகள்), யுதா சபுதேரா (17 புள்ளிகள்) ஆகியோர் அதிக புள்ளிகளை பெற்றார்கள். ஆனால் அவர்களது மற்ற வீரர்கள் யாரும் ஏழு புள்ளிகளுக்கு மேல் பெறவில்லை.
ஆனால், இந்திய அணியில் முயின் பெக் ஹபீஸ் (15 புள்ளிகள்), சஹைஜ் செகோன் (14 புள்ளிகள்), அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன் (13 புள்ளிகள்) மற்றும் பிரணவ் பிரின்ஸ் (12 புள்ளிகள்) பெற்றனர். அதுமில்லாமல் மற்ற வீரர்கள் சொற்ப புள்ளிகள் பெற்றனர்.
இந்த போட்டியில் இந்திய அணி 90-74 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியவை வென்றது. அதனால் நேரடியாக தகுதி சுற்றுக்கு முந்தைய போட்டிக்குத் தேர்வாகி உள்ளது.