சமூக ஊடக தளமான லிங்க்ட்இன்-ல், பிரதமர் மோடி பாரத ஸ்டேட் வங்கியின் இரண்டு ஆராய்ச்சி பதிவுகளை மேற்கோள் காட்டினார். அதில் 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள 9-ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் வாழும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. மேலும் இதுகுறித்து பத்திரிகையாளர் அனில் பத்மநாபன், இந்த பகுப்பாய்வுகள் இந்திய வளர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்றும் இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 15-ஆம் நாள் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
7 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தவும், நடுத்தர வர்க்கத்தை மேம்படுத்தவும் மோடி அரசாங்கத்தின் முயற்சியே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்தியாவின் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், போட்டி நிறைந்த சந்தையில் சேர அவர்களைத் தயார்படுத்துவதற்காகவும் மோடி அரசாங்கம் ‘ஸ்கில் இந்தியா’, ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் இவை அனைத்தும் இந்த அமிர்த காலில் தேசத்தை தன்னம்பிக்கையுடன் ஒரே குறிக்கோளுடன் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இது குறித்து பேசிய பிரதமர் தனது பதிவில்,
எங்களது கனவை நனவாக்கும் நோக்கில் பயணித்து வருகிறோம் என்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் ‘வளர்த்த இந்தியாவை ’ பார்க்கமுடியும் எனவும் “இந்த கண்டுபிடிப்புகள் எங்கள் கூட்டு முயற்சிகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், நாடு முன்னேறுவதன் அறிகுறியாகும். மேலும் இந்தியா பொருளாதார செழுமையின் புதிய சகாப்தத்தின் உச்சியில் நின்று அதை நோக்கி செல்கிறது என தெரிவித்தார்.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் ரூ.14.9 லட்சமாக உயரும் என பாரத ஸ்டேட் வங்கி ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வு ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் குறிப்பிடுகையில், வருமான வரி ரிட்டர்ன் தரவுகளின் அடிப்படையில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் ரூ.14.9 லட்சமாக உயரும் எனவும் முன்னதாக 2013-ஆம் ஆண்டில் நடுத்தர மக்களின் சராசரி வருமானம் ரூ.4.4 லட்சமாக இருந்தது.
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டில் 13 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் வருமானம் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்தது.
இந்த புதிய கருத்துக்கணிப்பு அடிப்படையில் நடுத்தர மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்னவென்றால், முதலாவதாக லட்சக்கணக்கான வருமான வரி செலுத்துவோர் குறைந்த வருமானத்தில் இருந்து மேல் வருமானக் குழுவிற்கு மாறியுள்ளனர். 2-வதாக பூஜியம் வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.
முன்னதாக 2011-ஆம் ஆண்டு 1.6 கோடி பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர். இதில் 84 சதவீத மக்களின் வருமானம் அப்போது ஆண்டுக்கு 5 லட்சமாக இருந்தது. தற்போது 2022-ஆம் நிதியாண்டில் 6.8 கோடி பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில் 64 சதவீதம் பேர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம். அதாவது, 2011-12-ஆம் ஆண்டில் 13.6 சதவீத மக்கள் குறைந்த வருமானத்தில் இருந்து நடுத்தர வருவாய் பிரிவிற்கு உயர்த்துள்ளனர்.
இந்நிலையில் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் இதுபோன்று தொடர்ந்து அதிகரித்தால், 2047 ஆம் ஆண்டில், இந்தியாவில் வரி செலுத்துவோர் வருமானம் 2022-ஆம் நிதியாண்டில் ரூ.13 லட்சத்திலிருந்து 2047 நிதியாண்டில் சுமார் ரூ.49.9 லட்சமாக உயரும். அதே நேரத்தில், சராசரி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.14.9 லட்சத்தை எட்டும். 2047-ம் ஆண்டுக்குள் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும்.
மேலும் 2023-ஆம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8.5 கோடியாக இருந்தது, வரும் 2047-ஆம் ஆண்டில் 48.2 கோடியாக உயரும். அது மட்டுமின்றி, பூஜியம் வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் 2047-ஆம் ஆண்டுக்குள் சுமார் 25 சதவீதம் குறையும் என கூறப்பட்டது, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு என்பது நேரடியாக வருமான வளர்ச்சியைக் குறிக்கிறது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.