கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக வருகின்ற ஆகஸ்ட் 25ல் பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பின் பாரதப் பிரதமர் கிரீஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 25ம் தேதி ஒருநாள் பயணமாக ஏதென்ஸ் நகருக்குச் செல்கிறார். அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசைச் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசிக்கிறார்.
இந்நிலையில், ஐரோப்பாவில் இந்தியா முதலீடு செய்வதற்கு கிரீஸ் நுழைவாயிலாக செயல்பட விரும்புவதாகக் கூறியுள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் நாட்டு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை தனியார் மயமாக்கலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் கிரீஸ் பயணத்தின் காரணமாக, வர்த்தகம் மற்றும் முதலீடு, கப்பல் போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.