பாகிஸ்தானில் நிதி பற்றாக்குறை இருப்பதால் அதன் மருந்துகள் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் குடிமக்கள் தங்கள் பயன்பாட்டிற்காக இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்யலாம் என அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: இறக்குமதி கொள்கை ஆணை 2022-ன் கீழ், இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் கொள்முதல் செய்வதற்கு இனி எந்த தடையும் இல்லை எனவும் அவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தடையில்லா சான்றுக்கு (என்ஓசி) விண்ணப்பிக்கலாம் என்று டிஆர்ஏபி தெரிவித்துள்ளது.