செஸ் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி போட்டியில் உலகில் நம்பர் 1 செஸ் போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் விளையாடிக் கொண்டுவந்தனர். இதில் முதலாம் சுற்று டிராவில் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டாம் சுற்றில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவின் இளம்வீரர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தை பெற்றார். ஆட்டம் முதலே தன் சிறப்பான ஆட்டத்தைக் வெளிபடுத்திய பிரக்ஞானந்தா கார்ல்சன்னுடன் சமமாகவே போட்டியிட்டுக் கொண்டு வந்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக சர்வதேச கவனத்தை தன்பக்கம் திருப்பி இவர் இன்று உலகில் நம்பர் 2 வீரரான ஹிகாரு நகமுராவையும் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவையும் தோற்கடித்து உலகளவில் புகழ் பெற்றுத் திகழ்கிறார்.
சாம்பியன் பட்டத்தை பெறவில்லை என்றாலும் உலகளவில் மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார் நம் இந்தியாவின் இளம்வீரர், தமிழகத்தின் தங்கப்பிள்ளை பிரக்ஞானந்தா.