ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கேரளாவின் அனைத்து குடிமக்களுக்கும், நமது சகோதர, சகோதரிகளுக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! இந்த திருநாளில் இயற்கை அன்னையின் எண்ணற்ற கொடைகளுக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறுவடைத் திருவிழா அனைவரிடமும் செழிப்பையும், நல்லிணக்க உணர்வையும் ஏற்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Greetings to all fellow citizens and our brothers and sisters in Kerala on Onam! On this auspicious occasion we express our gratitude to Mother nature for the countless bounties. May this harvest festival usher in prosperity and the spirit of harmony among all.
— President of India (@rashtrapatibhvn) August 29, 2023
இது தொடர்பாகக் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஓணம் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது மனப்பூர்வமான ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒற்றுமை, அறுவடை மற்றும் கலாச்சாரச் செழுமையின் கொண்டாட்டமாக ஓணம் கொண்டாடப்படுகிறது.
இது சமூகங்களைப் பாரம்பரியங்களின் தொகுப்பில் இணைக்கிறது. மகாபலி மன்னரின் நினைவாகக் கொண்டாடப்படும் இது, கருணை, இரக்கம் மற்றும் தியாகத்தின் காலத்தால் அழியாத மதிப்புகளை நினைவூட்டுகிறது. நமது வேளாண் சமூகத்தின் அயராத முயற்சிகளைக் கௌரவிப்பதற்கும், இயற்கை அன்னையின் கொடைக்கு நன்றி தெரிவிப்பதற்குமான ஒரு பண்டிகையாகவும் இது உள்ளது. ஓணம் பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.