"ஸ்மைல் ப்ளீஸ்": நிலவில் ரோவர் எடுத்த லேண்டர் புகைப்படம்!
Apr 21, 2026, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஸ்மைல் ப்ளீஸ்”: நிலவில் ரோவர் எடுத்த லேண்டர் புகைப்படம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ரோவர், தன்னைச் சுமந்து வந்த லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதற்கு “ஸ்மைல் ப்ளீஸ்” என்று தலைப்புக் கொடுத்து இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி இந்தியா விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்ஞான் ரோவர், நிலவில் இறங்கி தனது ஆராய்ச்சியைத் தொடங்கி இருக்கிறது. முதலில் நிலவின் மேற்பரப்பில் பயணித்தவாறே ஆய்வில் ஈடுபட்ட ரோவர், பின்னர் நிலவில் சுமார் 10 செ.மீ. ஆழத்துக்கு துளையிட்டு சோதனை செய்தது.

அதேபோல, தனது பயணத்தின்போது வழியில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தைப் பார்த்து திகைத்த ரோவர், பிறகு தனது பாதையை மாற்றி பயணித்து வருகிறது. அந்த வகையில், தனது சோதனையின் ஒரு பகுதியாக நிலவில் கந்தகம் இருப்பதைக் கண்டுபிடித்து தகவல் அனுப்பியது.

மேலும், இஸ்ரோ மையத்துக்கு ரோவர் அனுப்பிய தகவலில், “நான் சந்திரனின் ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். சிறந்தவை விரைவில் வரும்” என்று தெரிவித்திருந்தது.

Chandrayaan-3 Mission:

Smile, please📸!

Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.

The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).

NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE

— ISRO (@isro) August 30, 2023

அதேபோல, தனது பயணத்தின்போது கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது ரோவர். அந்த வகையில், தனது நண்பரான விக்ரம் லேண்டரை, ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது.

இந்த புகைப்படத்தை “ஸ்மைல் ப்ளீஸ்” என்று தலைப்பிட்டு இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அப்பதிவில், “பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் நேவிகேஷன் கேமராவானது எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies