உலக செஸ் கோப்பைப் போட்டியில், இந்தியா சார்பில் விளையாடி, 2-ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் உலக கோப்பைப் செஸ் இறுதி போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 5 முறை சாம்பியன் ஆன, உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் உடன் பிரக்ஞானந்தா மோதினார்.
மாக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டி கொடுத்ததால், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. கடுமையாகப் போராடிய பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்து, வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் மேள தாளம் முழங்க, பொய்க்கால் குதிரை, கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவர் பயின்ற வேலம்மாள் மெட்ரிக் பள்ளி சார்பில் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.