சென்னை உள்ள தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தில், மாணவி அக்க்ஷயா மகாலட்சுமிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மடிக்கணினி வழங்கியுள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600 க்கு 593 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவா் ஆகவேண்டும் என்ற கனவோடு நீட் தேர்விற்கு பயின்று, நீட் தேர்வில் 401 மதிப்பெண் பெற்றுள்ளார். இவா் சாதாரணக் குடும்பத்தை சார்ந்தவா். இவருடைய தந்தை ரப்பா் தொழிலாளியாகப் பணிப்புாிகிறார்.
இன்று சென்னையில், தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி அவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வாழ்த்திய நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள்..#Annamalai pic.twitter.com/bHgUZfY2dp
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 31, 2023
இந்த மாணவியை என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் கல்விக் கற்க மடிக்கணினி வேண்டும் என்று மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி, அண்ணாமலையிடம் கோிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தில் மாணவி அக்க்ஷயா மகாலட்சுமிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மடிக்கணினி வழங்கி வாழ்த்து தொிவித்துள்ளார்.
மடிக்கணினியைப் பெற்றுக் கொண்ட மாணவி அக்க்ஷயா மகாலட்சுமி மற்றும் அவரது தந்தை தங்களது நன்றி தொிவித்தார்கள்.