சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படம் சார்பாக தலைகவசம் அணியுங்கள் என்ற பேரணி #WearHelmet Rally நிகழ்ச்சி நடத்தப்பட்டது!
நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வெப்பன்’. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பாக அன்று (27.08.2023) காலை 6 மணிக்கு தலைகவசம் அணியுங்கள் என்ற பேரணி #WearHelmetRally நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை நடிகர்கள் வசந்த்ரவி, தான்யா ஹோப் மற்றும் தயாரிப்பாளர் மன்சூர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஹெல்மெட் அணிந்து சாலையில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதின் அவசியம் குறித்து வலியுறுத்துவதே இந்த பேரணியின் நோக்கம். ஓஎம்ஆரில் தொடங்கிய இந்தப் பயணம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முடிந்தது. இதில் பங்கு கொள்ள ராயல் என்ஃபீல்ட் ரைடர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.