கடந்த மூன்று நிதியாண்டுகளாக ஜிஎஸ்டி வசூல் தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது ஜூலை மாதம் வசூல் செய்த தொகையை விட 11 சதவிகிதம் அதிகம். இதில், மத்திய ஜிஎஸ்டி ரூ.28,328 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.35,794 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 83,251 கோடி, செஸ் வரியாக ரூ.11,695 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில், சரக்குகளை இறக்குமதி செய்ததன் மூலம் 3 சதவீதம் வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது என்றும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 14 சதவீதம் அதிகமாகி உள்ளது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வசூல் செய்யப்பட்ட அதிக தொகை 1.87 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.