அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 3 வது சுற்றை, 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் போராடி வென்றார்.
நியூயார்க்கில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3 வது சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச் சக நாட்டு வீரரான ஜெரேவை களத்தில் எதிர்கொண்டார். 3.45 மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் 4-6. 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஜெரேவை ஜோகோவிச் போராடி வீழ்த்தினார்.
போட்டிக்கு பிறகு பேசிய அவர், ” பல ஆண்டுகளாக, நான் இங்கு விளையாடிய கடினமான போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்தப் போட்டியை காண கிட்டத்தட்ட அதிகாலை 2 மணியிலிருந்து ஏராளமான இரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர் , காத்திருந்ததற்கு பலனாக அனைவரும் இந்த போட்டியை இரசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “போட்டியின் போது நான் மிகவும் கோபமாக இருந்தேன் ஆகையால் என்னை நான் சரி செய்துக் கொள்ள கண்ணாடி முன்பு நின்று என்னைப் பார்த்து நானே சிரித்துக்கொண்டேன். நான் முதல் இரண்டு செட்டில் பின்தங்கிருந்த போது எனக்கு நானே ஊக்கம் கொடுத்து என் நிலையை உயர்திக்கொண்டேன், ஆகையால் என்னால் வெற்றி அடைய முடிந்தது” என்று கூறினார்.