நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !
Sep 23, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த திமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கெடு .

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 2, 2023, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

48 மணி நேரத்திற்குள் தி.மு.க. நிர்வாகியை வெளியேற்றி வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் கிரிஜா. இவருக்குச் சொந்தமாக தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டில் ராமலிங்கம் என்பவர் நீண்டகாலமாக வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இவர், தற்போது ஆளும் தி.மு.க. கட்சியின் வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவரை, வீட்டைக் காலி செய்யும்படி கடந்த 13 வருடங்களுக்கு முன்பிருந்து கூறிவருகிறார். ஆனால், ராமலிங்கம் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார்.

எனவே, வீட்டை காலி செய்து கொடுக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கிரிஜா வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டைக் காலி செய்யுமாறு ராமலிங்கத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், ராமலிங்கம் காலி செய்யவில்லை. எனவே, கிரிஜா உச்ச நீதிமன்றத்தை நாடினார். வீட்டை காலி செய்யுமாறு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும், ராமலிங்கம் காலி செய்யவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ராமலிங்கம் தாக்கல் செய்ய மனுக்களையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டன.

இது ஒருபுறம் இருக்க, கிரிஜா நீதிமன்றத்தை நாடியதால் 2017-ம் ஆண்டு முதல் வீட்டு வாடகை தருவதையும் ராமலிங்கம் நிறுத்தி விட்டார். இதையடுத்து,  கிரிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமலிங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு ராமலிங்கம் நேரில் ஆஜராகி, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வீட்டை காலி செய்து கொடுப்பதோடு, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார்.

ஆனாலும், ஆளும் கட்சிப் பிரமுகர் என்கிற தைரியத்தில், ராமலிங்கம் வீட்டையும் காலி செய்யவில்லை, வாடகை பாக்கியையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தண்டபாணி நகரில் சொந்த வீடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, கிரிஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ராமலிங்கம் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஆகவே, இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.காவல் ஆணையர் போதுமான காவல்துறையினரை நியமித்து, 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வீட்டின் உரிமையாளரான கிரிஜாவிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு குறித்து அரசு வழக்கறிஞர் உடனடியாக காவல்ஆணையரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோ அல்லது மின்னணு தகவல் பரிமாற்றம் வாயிலாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: chennai high courtjustice s. m . subramaniam
Share
Tweet
SendShare
Previous Post

ஓபன் டென்னிஸ் : போராடி வென்ற ஜோகோவிச்

Next Post

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies