சுவிட்சர்லாந்தில் நீரஜ் சோப்ராவுக்கான பயிற்சி முகாமுக்கு விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பு உலக தடகள சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்த மாதத்தில் அமெரிக்காவின் யூஜினில் நடைபெறவுள்ள டைமென்ட் லீக் 2023 இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்தில் மாக்லிங்கனில் 12 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்க மிஷன் ஒலிம்பிக் செல் ஒப்புதல் அளித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 12 வரையிலான பயிற்சி முகாமுக்கு மொத்தம் ரூ.5.89 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று சூரிச்சில் நடந்த டைமென்ட் லீக் போட்டியில் 85.71 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து இரண்டாம் இடத்தை பெற்றார் நீரஜ் சோப்ரா.
புடாபெஸ்டில் நடந்த ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் ஈராஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி பாகிஸ்தானின் அர்ஷத் நதீமை ஒரு மீட்டருக்கு குறைவான வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் சரித்திரம் படைத்தார். நீரஜ் தனது இரண்டாவது முயற்சியில் 88.17 மீ எறிந்து தனது சிறந்த எறிதலை பதிவு செய்யது இறுதிவரை தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டார்.
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை திட்டமிடபட்டுள்ள ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் மீண்டும் களமிறங்குவார். இந்த போட்டியானது இந்த ஆண்டின் 25 வயதான ஈட்டி எறிதல் வீரருக்கான இறுதி பெரியப் போட்டியாகும்.