நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது,
“மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் ஆழமான கட்டுரை, அனைத்து விதமான கருத்துகளையும் சம மரியாதையுடன் அரவணைப்பதன் மூலம் நாடாளுமன்றம் எவ்வாறு “ஜனநாயகத்தின் இனிய மாண்பை” உருவாக்கியுள்ளது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். அதே நேரத்தில் அரசியலமைப்பு விழுமியங்கள், தேசிய நலன் மற்றும் பொது நன்மைக்காகவும் குரல் கொடுக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.