நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்ததை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில், விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அதற்குள் இருந்த பிரக்யான் ரோவர் சாதனம், நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டது.
மேலும் நிலவு தொடர்பான அனைத்து படங்களையும், விக்ரம் லேண்டர் அனுப்பியது. பிரக்யான் ரோவரை லேண்டர் குழந்தை போல் கண்காணித்து வந்தது.
ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம், பிளாஸ்மா ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் நிலவின் மேற்ப்பரப்பில் ரோவர் வாகனம் வெற்றிகரமாக 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
The Rover completed its assignments.It is now safely parked and set into Sleep mode.
APXS and LIBS payloads are turned off.
Data from these payloads is transmitted to the Earth via the Lander.Currently, the battery is fully charged.
The solar panel is…— ISRO (@isro) September 2, 2023
நிலவில் 15 நாள் பகல், 15 நாள் இரவு என இருக்கும். தற்போது நிலவில் பகல் முடிந்து இரவு தொடங்கி இருப்பதால், பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உறக்க நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பதிவில், “ரோவர் அதன் பணிகளை முடித்தது. இது இப்போது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகளில் இருந்து தரவு லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பப்படுகிறது. ரோவரின் பேட்டரிகள் தற்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. ரோவரின் ரிசீவரும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. ரோவர் வாகனம் தன்னிடம் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் லேண்டரை படம் பிடித்து புவிக்கு அனுப்பியுள்ளது. இந்த கேமரா பெங்களூரில் அமைந்துள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
🏏Pragyan 100*
Meanwhile, over the Moon, Pragan Rover has traversed over 100 meters and continuing. pic.twitter.com/J1jR3rP6CZ
— ISRO (@isro) September 2, 2023