உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த 120 வயது குஞ்சீரும்மா இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்கள் வரை, உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டி மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார். இந்த சாதனையைக் கேரளாவைச் சேர்ந்த 120 வயது குஞ்சீரும்மா முறியடித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த குஞ்சீரும்மா பாட்டி.
பள்ளிக்கூடம் பக்கம் எடிப்பார்க்காத குஞ்சீரும்மாவுக்கு, இளம் வயதிலேயே திருமணம். 17 வயதில், தனது உறவினரான கலம்பன் என்பவரை கரம் பிடித்தா்ா. மண வாழ்வில், வெற்றிகரமாக 13 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில், 7 குழந்தைகளை பறிகொடுத்துவிட்டார்.
இதுவரை 5 தலைமுறைகளைக் கண்டுள்ள குஞ்சீரும்மா பாட்டிக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட எந்த ஒரு நோய் தாக்குதலுக்கும் அவர் ஆளாகவில்லை.
அதேவேளையில், கண் பார்வையும், காது கேட்கும் திறனும் கொஞ்சமும் குறையாமல், ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார்.
எது எப்படியோ, இன்று உலகில் மிகவும் வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டா் குஞ்சீரும்மா பாட்டி.
குஞ்சீரும்மா பாட்டிக்கு நாமும் வாழ்த்து சொல்வோம்.