உலக அளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.
அந்த வகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குறித்து பார்ப்போம்
தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 1972-ம் ஆண்டு, ஜூன் 10-ந் தேதி சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் இரகுநாத பிச்சை, இலட்சுமி பிச்சை ஆவர். இவரின் சொந்த ஊர் மதுரை என்றாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில் தான்.
கோரக்பூர் ஐஐடியில் பொறியியல் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்க Stanford பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டமும், Pennsylvania பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் முடித்தார்.
பின்னர், 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சுந்தர் பிச்சை தனது கடினமான உழைப்பால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதி அமர்த்தப்பட்டார்.
தற்பொழுது, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்(Alphabet) ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிக்கிறார்.
இவருக்கு 2022-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.