அமைச்சர் உதயநிதியின் ஹிந்து விரோதப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், இந்து மதம் குறித்தும் இழிவாகப் பேசியிருந்தார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், இராம நவமியின்போது, மேற்குவங்கத்தில் முதலில் கல் வீசினார்கள். பின்னர், வெடி குண்டு வீசினார்கள். கடைசியாக, துப்பாக்கி சூடும் நடத்தி, தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள்.
அதேப் போல, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் கடவுள் சீதா தேவிக்கு எதிராகவும், இராமாயணத்துக்கு எதிராகவும் அவதூறு பேசினார்கள். இப்போது, சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். இந்து விரோதிகள்தான் இப்படி பேசுவார்கள்.
ஓட்டு வங்கி அரசியலுக்காக, அவர்கள் இந்த சமூகத்தைப் பிரிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காகக் கீழ்த்தரமாகச் செயல்படுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இந்தியா கூட்டணியில் தலைவரை தேர்வு செய்ய முடியாதவர்கள், இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.