இந்தியாவில் 2047-ம் ஆண்டில் ஊழல், சாதி, மதவாதம் ஆகியவை இருக்காது- பிரதமர் மோடி
Mar 15, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 2047-ம் ஆண்டில் ஊழல், சாதி, மதவாதம் ஆகியவை இருக்காது- பிரதமர் மோடி

மிகவும் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா பின்பற்றும் அணுகுமுறை, உலக அளவில் வழிகாட்டுகிறது.

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிகவும் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா பின்பற்றும் அணுகுமுறை, உலக அளவில் வழிகாட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபம், சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கில் வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

ஜி20 மாநாடு, தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும், இந்த மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேசி உட்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி,
“இந்தியாவின் தொலைநோக்கு மற்றும் வார்த்தைகளை உலக நாடுகள் வெறும் கருத்துகளாக மட்டும் பார்ப்பது இல்லை எதிர்காலத்துக்கான வழிகாட்டுதலாகவே பார்க்கின்றன. உலக நாடுகளின் பொருளாதார மைய பார்வையாக மாறி வருகிறது.

நீண்ட காலமாக, இந்தியா பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடாக பார்க்கப்பட்டது. தற்போது உயர்ந்த லட்சியம் மற்றும் திறமையானவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும் நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் அதிக மக்கள் தொகையால் அடுத்த சில ஆண்டுகளுக்குச் சிறந்த பலன் கிடைக்கும். வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கும் சிறந்த வாய்ப்பு இன்றைய இந்தியர்களுக்கு உள்ளது.

ஒரு காலத்தில் இந்தியா மிகபெரிய சந்தையாக பார்க்கப்பட்டது. தற்போது உலகத்தின் சவால்களுக்கு தீர்வு காணும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இலவசக் கலாச்சாரத்தை எதிர்க்கட்சிகள் ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற பொறுப்பற்ற நிதி கொள்கைகள் குறுகிய கால அரசியல் பலனை தரலாம். ஆனால், நீண்டகாலத்துக்கு மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்.

வரும் 2047-ம் ஆண்டில் 100-வதுசுதந்திர தினத்தை கொண்டாடும்போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். அப்போது ஊழல், சாதி,மதவாதம் உள்ளிட்ட தீயசக்திகளுக்கு கட்டாயம் இடம் இருக்காது.

சர்வதேச கூட்டங்களை டெல்லிக்கு வெளியே நடத்தும் அளவுக்கு, இதர மாநில மக்கள் மீதுமுந்தைய அரசுகளுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது நாட்டில் நம்பிக்கை விதையை விதைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா பின்பற்றும் அணுகுமுறை, உலக அளவில் வழிகாட்டுகிறது. இந்தியா தலைமை வகிக்கும் ஜி20 மாநாட்டின் கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ என்பது வெறும் கோஷம் அல்ல. நமது கலாச்சார நெறிமுறைகளில் இருந்து பெறப்பட்ட பரந்த தத்துவம் ஆகும்.

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தூதரக அளவிலான பேச்சுவார்த்தைதான் ஒரேவழி. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றாலும், இல்லாவிட்டாலும், உலக அமைதிக்கான ஒவ்வொரு முயற்சிக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்.” எனத் தெரிவித்தார்.

 

Tags: PM Modipm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றக் கலாச்சார நிகழ்ச்சி ஒரு நல்ல முன்முயற்சி: பிரதமர் மோடி!

Next Post

நூறு கோடி டாலர்களைக் குவித்த பார்பி !

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies