சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், சனாதனம் ஒழிக்கப் படவேண்டும் என்றும், இந்து மதத்தின் மீதும் ,இந்துக்கள் மீதும் வெறுப்புப் பேச்சைக் கொட்டினார்.
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சென்னையில் நடந்த சனாதன மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியுள்ளார்.
அப்போது, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இது, சனாதன தர்மத்தின் மீதும், இந்து மதத்தின் மீதும் வெறுப்பு பேச்சாகவே பார்க்கப்படுகிறது.
சனாதன தர்மத்தைத் திட்டமிட்டு ஒழிக்கவேண்டும் என்றுபேசியுள்ளார். இந்தச் செயல், அவர் ஏற்றுக் கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரான செயல்.
இந்தியாவில் சனாதன தர்மத்தை 80 சதவீதம் மக்கள் இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றனர். அப்படி இருக்கையில், அந்த 80 சதவீத இந்துக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது சட்டப்படி மிகப் பெரிய குற்றம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.