தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்Cகரை அருவி அமைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி, கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், உள்ளே சென்று பார்க்கவும் தேவதானப்பட்டி வனத்துறை அதிகாரி தடை விதித்துள்ளார்.
இதனிடையே நேற்று விடுமுறை நாள் என்பதால், விடுமுறை தினத்தைக் கழிக்க கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததும் மறு அறிவிப்பு செய்து சுற்றுலாப் பயணிகளுக்குக் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து, வனத்துறையினரின் அறிவிப்பால் ஏமாற்றத்துடன் சென்றனர்.