அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கவேண்டும்! - இந்து முன்னணி தலைவர் கோரிக்கை
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கவேண்டும்! – இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பதவிப் பிராமணத்திற்கு எதிராகச் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டது அவர் சார்ந்துள்ள துறைக்கு எதிரானது. பாராபட்சம் இல்லாமல் செயல்படுவேன் என்று அமைச்சராக அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது சட்ட மீறலாகும்.

சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கவும், போற்றவும் ஏற்பட்டதுதான் திருக்கோவில்கள். அதனை பராமரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்து சமய அறநிலையத்துறை என தமிழக அரசு கூறுகிறது.

ஆனால், சனாதனத்தை ஒழிக்க நடந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தமிழக அரசு திருக்கோவில்களை அழிக்க செயல்படும் மறைமுகத் திட்டமோ என சந்தேகம் எழுகிறது.

திமுக அரசு அரசு பதவி ஏற்றதில் இருந்து, திருக்கோவில் வழிபாடுகளில் தலையிட்டு சீரழித்த பல நிகழ்வுகளும், பராமரிப்பு இன்றி மிக முக்கியமான கோவிலான அரங்கன் கோபுரம் சிதைந்ததும், குற்றாலநாதர் கோவில் சட்டவிரோத கடைகளால் தீப்பிடித்து அரச மரம் மற்றும் விநாயகர் கோவில் தீப்பிடித்து அழிந்தது என பலவற்றை கண்டோம். தங்க நகைகளை இரகசியமாக உருக்கி வங்கிகளில் இருப்பு வைப்பது குறித்து இதுவரை முழுத் தகவலையும் அரசு வெளியிடவில்லை.

மேலும், வேற்று மதத்தினர் ஆக்கிரமித்துள்ள கோவில் சொத்துக்களை மீட்க சரியான நடவடிக்கையை அமைச்சரும் அதிகாரிகளும் எடுப்பதில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழக அரசு இந்து கோவில்களை அழிக்கத் திட்டமிடுகிறது என்ற சந்தேகத்தை மேலும் உறுதிபடுத்துகிறது. அதனை ஆமோதிப்பது போல இருக்கிறது அமைச்சர் சேகர்பாபுவின் நடவடிக்கை.

சனாதன இந்து சமயத்தை ஒழிக்க நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தமிழக ஆளுநர் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும், அமைச்சராக இருக்க தகுதியற்ற சேகர் பாபுவை, தகுதி நீக்கம் செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கையை இந்து முன்னணி மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: udayanidhiindu munanisekarbabu ministerkadeswara subramaniam
ShareTweetSendShare
Previous Post

கும்பாபிஷேகத்திற்குத் தயாராகும் கள்ளழகர் கோவில்!

Next Post

ஆசியக் கோப்பை ஏன் ஆடவில்லை பும்ரா?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies