தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரித்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரித்துவிட்டது. குடிபழக்கமும் அதிகரித்து விட்டது. இதை எல்லாம் காரணம் திராவிட மாடல் என்ற திமுக அரசுதான். இதில் கவனம் கொள்ளாமல், இந்தியா பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மற்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
எப்போதுமே நாம் சொல்லுவோம் உள்வீட்டு பிரச்னையைப் பேசினால்தான் பிரச்னை தீரும். நாட்டில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது.
குறிப்பாக, தமிழகத்தில் கஞ்சா, மது, அரிவாள் கலாசாரம் என எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது. இதை எல்லாம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும். ஆனால், அவர் பேச மறுக்கிறார். ஹரியானா மற்றும் மணிப்பூர் பற்றிப் பேசுகிறேன் எனக் கிளம்பி இருக்கிறார்.
பாரத தேசத்திற்காகப் பேசுவதற்காக, 142 கோடி இந்தியர் உள்ளனர். எனவே, இந்தியா குறித்து ஸ்டாலின் பேசதேவையில்லை. வரும், 2024 -ம் ஆண்டுத் தேர்தலில் தமிழகத்தின் பிரச்னையை வைத்து ஓட்டு கேட்டால், திமுகவுக்கு ஒரு ஓட்டு கூடக் கிடைக்காது. இதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டு உள்ளார்.
ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். 3-வது முறையாகவும் பாரதப் பிரதமராக மோடிஜியே வெற்றி பெறுவார் என்றார்.