கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவை உதயநிதி ! – இந்து முன்னணி குற்றச்சாட்டு
Mar 15, 2026, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவை உதயநிதி ! – இந்து முன்னணி குற்றச்சாட்டு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதன எதிர்ப்பு, ஒழிப்பு என்பது கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி திட்டம். இதன் எதிரொலியாகவே, வெளிநாட்டு கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவையாக உதயநிதி செயல்படுகிறார் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் என்ற நக்சல் இடதுசாரி பயங்கரவாத அமைப்பு சனாதனம் ஒழிப்பு மாநாடு என்ற கூட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடத்தியது.

அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டியது சனாதன தர்மம் என்றும் பேசியுள்ளார். சனாதனம் சமநீதிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது, மாற்றத்திற்கு எதிரானது என பிதற்றியுள்ளார். சனாதன தர்மத்தை தெரிந்து பேசினாரா? அல்லது நிதானத்தில் இல்லாமல் உளறினாரா என்று தெரியவில்லை.

உதயநிதி பேச்சிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை என மழுப்பலாக பேசி சமாளிக்க முயன்று உள்ளார்.

கிறித்துவத்தை, இஸ்லாத்தை ஒழிப்போம் என்பது கிறித்தவர்களை, முஸ்லிம்களை அல்ல என்று கூறினால் தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஏற்பாரா? என்பதற்குப் பதில் கூறியாக வேண்டும்.

சனாதனம் என்பது இந்து தர்மத்தை குறிப்பிடுவது. அது இந்துக்களின் நம்பிக்கை, அதனை ஒழிப்போம் என்பது மத வெறுப்பு பிரச்சாரம் தான்.

இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்தது தி.மு.க. கூட்டணி கட்சிகள் சேர்ந்து நடத்திய நாடகம். அந்த சட்டவிரோத கூட்டத்தில், அரசியல் சாசன சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர்கள் உதயநிதியும், சேகர் பாபுவும் கலந்து கொண்டது சட்டவிரோத செயல்.

சமீபத்தில் மத வெறுப்பு பேச்சின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கருத்து கூறியுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் மீதும் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும்.

சனாதன எதிர்ப்பு ஒழிப்பு என்பது கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி திட்டம். கிறித்துவரான உதயநிதி, வெளிநாட்டு கிறித்துவ மிஷனரிகளின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது.

மேலும் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரும் தொடர்ந்து இந்து விரோதமாக பேசி வருகின்றனர்.

இந்து மத வெறுப்பு கருத்துக்களை ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எப்படி எல்லாம் பேசி கேவலப்படுத்தினார்கள் என்பதை இந்துக்கள் மறந்திருக்க முடியாது.

ஆட்சியில் இல்லாதபோது அழுது புரண்டு இந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கிறோம் என நாடகம் போடுவதும். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல இந்துக்களை கேவலப்படுத்தி பேசுவது இனி நடக்காது. இது நவீன தொழில்நுட்ப காலம். இளைஞர்கள் திராவிட தகிடுதத்தங்களை உணர்ந்து விட்டார்கள்.

அதே சமயம், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் மத வெறுப்பு பேச்சு பேசியதன் மீது தமிழக காவல்துறை, இங்குள்ள நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க தயங்கலாம்.

ஆனால், மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்கள் மன்றத்திலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்கள், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தோற்கடித்து பாடம் புகட்டுவார்கள்.

இவர்கள் அனைவர் மீதும் இந்து முன்னணியின் ஓர் அணியான இந்து வழக்கறிஞர் முன்னணி புகார் அளித்து வழக்கு தொடரும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags: kadeswara subramaniamhindu munani
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்!-பிரக்ஞானந்தா

Next Post

அமைச்சர் சேகர்பாபு உடனே பதவி விலக வேண்டும்! -அண்ணாமலை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies