சந்திரயான் -3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் இந்திய மாணவர்களிடையே உலகளாவிய விருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்
நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் “புதுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட அறிவியல்” என்ற தலைப்பில் ஜி 20 இன் கீழ் அறிவியல் 20 (எஸ் 20) மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,
ஜூன் 2020-ல் பிரதமர் நரேந்திர மோடியால் விண்வெளித் துறை தொடங்கப்பட்டதன் பிறகு, விண்வெளி புத்தொழில்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 150 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை அறிவியல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களால் வழிநடத்தப்படுகின்றன என்று கூறினார்.
புத்தொழில்கள் புதுமையான கண்டுபிடிப்புகளின் மையங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்று கூறினார். ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவை இந்தியாவை இன்னும் வலுவான பொருளாதார சக்தியாக மாற்றவும், ஒவ்வொரு ஆண்டும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக அடைய உதவும் என்று கூறினார்.
“அவை வேலைகளை உருவாக்குவதுடன், இது வலுவான மற்றும் ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். புத்தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் நடைமுறை அணுகுமுறையை ஊக்குவித்து பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது.
இது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களைப் புத்தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் தங்களுடைய எண்ணங்களைச் செயல்படுத்த ஊக்குவிக்கிறது என்று கூறினார். சுமார் 110 யூனிகார்ன்களுடன் புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியா இப்போது 3 வது இடத்தில் உள்ளது,”என்று அவர் கூறினார்