செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
புரட்சி மனப்பான்மையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாகச் செயல்படும் திறனும் பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று.
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞராக இருந்தாலும், முழு மனதுடன் சுதந்திரப் போராட்டத்தில்… pic.twitter.com/ctgoYc9S6p
— K.Annamalai (@annamalai_k) September 5, 2023
புரட்சி மனப்பான்மையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாகச் செயல்படும் திறனும் பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞராக இருந்தாலும், முழு மனதுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
அவரது சுதேசிப் பணியின் ஒரு பகுதியாக, ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவி, கப்பலோட்டிய தமிழர் என்ற புகழ் பெற்றவர்.
நாட்டு விடுதலைக்காகப் போராடி, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் கடினமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டும், தனது சுதந்திர வேட்கையை விட்டு விடாத செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், தத்துவப் பேராசிரியராக முத்திரை பதித்தவருமான அமரர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த தினம் இன்று.
பல்கலைக்கழகங்களுக்கும் பள்ளிக் கல்விக்கும் சிறப்பான கல்விக் கொள்கைகளை வகுத்த அவரது பிறந்த… pic.twitter.com/oLzb4yothQ
— K.Annamalai (@annamalai_k) September 5, 2023
சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும், தத்துவப் பேராசிரியராக முத்திரை பதித்தவருமான அமரர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த தினம் இன்று. பல்கலைக்கழகங்களுக்கும் பள்ளிக் கல்விக்கும் சிறப்பான கல்விக் கொள்கைகளை வகுத்த அவரது பிறந்த தினம், ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுவது எத்தனை பொருத்தமானது. சுதந்திர இந்தியாவில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான அமரர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் புகழைப் போற்றி வணங்குகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.