வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழன்’ என்ற அடையாளம் நமக்குப் பெருமை தருகிறது. ஆனால், ‘தமிழன்’ என்ற வார்த்தைக்கே பெருமை தந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
இவர், வீரம் விளைந்த பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஓட்டப்பிடாரம் கிராமத்தில் 5-9-1872 அன்று, உலகநாதன்-பிரமாயி தம்பதிக்குத் தவப் புதல்வராகப் பிறந்தார்.
புகழ்மிக்க வழக்கறிஞராகத் திகழ்ந்த தன் தந்தையைப் போலவே 1894-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனாரும் வழக்கறிஞராகவே வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும், தேச பக்தியும், விடுதலை வேட்கையும் வ.உ.சி.யை ஆற்றல் மிக்க சுதந்திரப் போராளியாக மாற்றியது.
தொடர்ந்து, சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வ.உ.சி.
தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவளில் ஒருவர்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்ற சிதம்பரனார் அழைக்கப்பட்டார். இவரின் செயல் ஆங்கிலேயரை ஆத்திரமடையச் செய்தது. இதனால், பலமுறை சிறைக்குக் சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்தார். இவர் 1936-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
1972-ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், ஒரு சிறப்புத் தபால்தலை வெளியிடப்பட்டது