சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சு காரணமாக, அவருக்கு எதிராக தானாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் கடிதம் கொடுத்துள்ளனர் .
சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசும் போது, ‘சிலவற்றை நாம் ஒழிக்க தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோன்று தான் சனாதனம்; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்’ என்றார். இதற்கு நாடுமுழுவதும், பாஜக மற்றும் 80 சதவீத இந்துக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உதயநிதி பேசியது குறித்து தானாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்கும்பட்சத்தில், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உதயநிதிக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.